பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறிதொரு காலை பாண்டி நாட்டின் கண்ணதான மோகூ ரில் வாழ்ந்தனர். நாமக்கல் என இப்போதுவழங்கப்பெறும் நான் மொழி நாட்டிலும் வாழ்ந்திருந்தனர். இதைத் திருவா ளர் ரா. இராகவையங்கார் அவர்களும் ஒப்புக் கொண்டுள் ளார். கோசர் என்ற தலைப்பிட்ட தம் சிற்றாராய்ச்சி நூலில் அவர், 'கோசர் முதலில் கொங்கில் வதிந்தவரென் றும், பின்னர்க் குடகடற் பக்கத்து மலை நாட்டிற்குடியேறி யவரென்றும் துணியப்படுதல் காண்க." என்று கூறும் அவர், தொடர்ந்து மதுரைக் காஞ்சியில் இவரை, நான் மொழிக் கோசர் தோன்றியாங்கு' என்று கூறப்பட்டிருப்ப தை, நான் மொழி நாட்டுக் கோசர் எனக் கிடந்த படியே பொருள் கொள்ளலாம் என வும் முற்காலத்து நான் மொழி நாடென ஒன்றுண் டென்பது சாசன ஆராய்ச்சியாளர் கண் டது திருவறைக் கல்லும் நான் மொழி நாடும் உடைய வத்தராயனான விடுகாதன்? என்றவரிகளால் இதை அறிய லாம். இத் திருவறைக் கல் இக் காலத்து நாமக்கல் என வழங்குவதென்று துணியப்படுவது என்றும் கூறியுள்ளார். ஆக, உரைபெறு கட்டுரையில் வரும், கொங்கிளங் கோசர் : எ ன் ற தொடருக்குக், 'கொங்கு மண்டலத்து இளங்கோவாகிய கோசர்’ என அடியார்க்கு நல்லார் கூறியிருக்கும் பொருளில் குழப்பம் எதுவும் இல்லை. குழப் பம் இல்லா உரையில் குழப்பம் இருப்பதாகக் கொண்டு கண்ணகி நல்லாளுக்குக் கோயில் கட்டியதே, அடியார்க்கு நல்லார்க்கு உடன்பாடில்லை என அவர் மீது, மாபெரும் பழி சுமத்தி இருப்பது பொருந்தாது. 146