பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகம்:205, மதுரைக் காஞ்சி 771-773 ஆகிய இரண்டினை மட்டும் காட்டியுள்ளார். . . " அதே நூலின் வேறொரு பக்கத்தில் இக்கிள்ளிவளவன் தன் நாட்டு வலிமிகுத்தோங்கும் கோ ச நிலத்தைக் கொள்ள விரும்பி இவர் விளங்கு படையை நூறினான் என்றும் கூறியுள்ளார். - 3 டாக்டர் சி ஈ இராமச்சந்திரன் அவர்கள் கருத்து : சென்னைப் பல்கலைக் கழக வாலாற்றுத்துறைத் தலைவராக விளங்கிய திரு. சி, ஈ, இராமச்சந்திரன் அவர் கள், 1974ல் வெளிவந்த,"வரலாற்று நோக்கில் அகநானூறு (Ahananuru in its Historical setting) sisir D EspayÉiųsi sir தம் ஆங்கில நூலின், 20 ஆம் பக்கத்தில் - கிள்ளிவளவன், காவிரிப்பூம் பட்டினத்து மன்னன் ! அவன் தன் நாட்டு எல்லையை விரிவாக்கிக் கொள்ளும் ஒரு முயற்சியில், செல்வ வளம் மிக்க கோசர் படையைத் தாக்கி அழித்தான் என நக்கீரரும் கூறியுள்ளார்’ எனக் கூறித்தம் கூற்றிற்குச் சான்றாக நக்கீரர் பாடிய, மேலே காட்டிய அகம், 205 பாடலைக் காட்டியுள்ளார்.19 , அதே நூலில் பக்கம் 26ல், பழையன்மாறன், கிள்ளி வளவனால், கூடல் எனும் இடத்தில் தோற்கடிக்கப் பட்டான் கிள்ளி வளவன் பழையனுக்குரிய பல களிறுகளை யும், விரைந்து பாயும் குதிரைகளையும் கைப்பற்றிக் கொண் டான்' எனக் கூறிவிட்டு தம் கூற்றிற்குச் சான்றாக அகம் 306ஐக் காட்டியுள்ளார்.1 43