பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு, வெஃகாமை' என்ற தலைப்பில், பத்துக் குறள் களில், வெகுதலின் கொடுமையை விளக்கியுள்ளார் திருவள்ளுவர். ‘வெஃகின், குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்,28 இறல் ஈனும் எண்ணாது வெஃகின்' என்பன அவர் வழங்கும் அறிவுரை : பிறர் பொருளை வெஃகுவார், அடுத்து என்ன செய் வார் என்பதையும் வள்ளுவரே விளக்கியுள்ளார். வெஃகு வார், வெறித்தனமான செயல்களை மேற்கொள்வர். வெஃகி வெறிய செயின்” என்பது அவர் தரும் விளக்கம் ஆக, இச் சொல்லும், ப்ொலம்பூண் கிள்ளிக்குப் புகழ் சேர்ப் பது இல்லை, மாறாக இழிவையே சேர்ப்பதாம். பெரு நாடும். பெரும் பொருளும் பெற்றிருத்தல் தமக்கே உரிமை, தம் கண்முன்னே பிறர் தம்மினும் பெருக வாழ்வதா என எண்ணி, அவர்பால் உள்ள பொருள் மீது ஆசை கொண்டு விட்டால் , வெஃகி விட்டால், அவ்வாசை கொண்டவர் உள்ளம் வெறிபிடித்து விடும். நல்லன எதை யும் எண்ணாது; பொல்லாதன அனைத்தையும் செய்யத் துணிந்து விடும் பொலம்பூண்கிள்ளியின் செயலும் அதுவே: பொலம்பூண் கிள்ளியின் நாடாசையைக் கூறும் இப் பாட்டின் ஆசிரியர் நக்கீரர், பிறிதொரு பாட்டில் கிள்ளி அடுத்து செய்த செயல்களையும் கூறியுள்ளார். கோசர் நிலம் கொள வெஃகிய கிள்ளி, அடுத்து செய்த செய லாக அப்பாட்டில் அவர் கூறியிருப்பது இது ; . ಹ6Tb புகுந்து காற்றென விரைந்து பாயும் குதிரைப் படைகளையும், எண்ணிலாக் களிற்றுப் படைகளையும், 50