பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்றைச் செயல் படுத்தும் வீரர்களையும் கொண்ட வெள்ளம் போல் பரந்த பெரிய படையைக் கொண்டு சென்று, பாண்டியர் தலைநகராம் கூடல் மாநகரை வளைந்துக் கொண்டு ஆங்குத் தனக்கு வாய்ப்புடைய இடம் என அவன் தேர்ந்து கொண்ட இடத்தே பாடி கொண்டு தங்கி விட்டான். அக் காலை பாண்டியர் அரி யனையில் வீற்றிருப்போன், இளையனே ஆயினும், பாண் டியர் குலத்து வந்தோர் பலருள்ளும் சிறந்தோனாகிய தலையாளங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், என்பதை அறிய மறந்து விட்டது கிள்ளியின் வெஃகுதல் அதனால் வெறி கொண்டு விளைவை நினையாது சென்று தங்கி விட்டான்,80 விளைவு தெரிந்ததே ! ஆக சொல்லாட்சி நிலையினும், ஆசிரியர் நக்கீரர், கோசர்க்குப் புகழ்சேர்த்துள்ளார் : பொலம் பூண் கிள்ளிக்கு இகழ் சேர்த்துள்ளார் என்பது தெளிவாகிறது. வினைச் சொற்களின் முடிவு : இனி, கோசர் விளங்கு படை நூறி, நிலம் கொள. வெஃகிய பொலம்பூண் கிள்ளி என்ற தொடரில் இடம் பெற்றிருக்கும் வினைச் சொற்களின் முடிவினைக் கொண்டு வரலாற்றுப் பேராசிரியர்களின் கருத்தினை ஆராய்வாம். இத் தொடரில் இடம் பெற்றிருக்கும் வினைச் சொற் கள் மூன்று : அவையாவன : நூறி, கொள, வெஃகிய இவ ற் றுள் நூறி என்பது இறந்த கால வினையெச்சம்.அது கொள என்பதில் உள்ள கொள் என்ற வினையைக் கொண்டு முடிந்தது; கொள என்பது எதிர்கால வினையெச்சம் அது வெஃகிய என்பதில் உள்ள வெஃகல் என்ற வினையைக் கொண்டு முடிந்தது, வெஃகிய என்பது இறந்த காலப் 51