பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு அகச்சான்று மட்டும் கொண்டு ஒரு முடிவுக்கு வந்து விடுதல் கூடாது; ஒன்று, அந் நிகழ்ச்சி பற்றிக் கூறும் அனைத்து அகச்சான்றுகளையும் கருத்தில் கொள்ளவேண் டும். இரண்டு, அந்த அகச் சான்றினை அளிக்கும் புலவர் யார்? அவர் அதுபற்றி வேறு ஏதேனும் கூறியுள்ளனரா? என்பதையும் பார்க்க வேண்டும் மூன்று. அந்நிகழ்ச்சி யோடு தொடர்புடைய வேறு அகச் சான்றினை அளிக்கும் புலவர், அப்பாட்டுடைத்தலைவன் பற்றிக் கூறியிருக்கும் வேறுசெய்திகள் யாவை?நான்கு; அப்பாட்டுடைதலைவனை இந் நிகழ்ச்சியோடு தொடர்பு படுத்தி வேறு புலவர் யாரே னும் கூறியுள்ளனரா? கூறியிருந்தால், யாது, அந்தச் செய்தி, என்பனவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும் அகநானூறு, 205ஆம் பாடலில், பொலம்பூண் கிள்ளி யின் கோசர் படையை நூறி, அவர் நிலங்கொள வெஃ கிய செயலைக் கூறிய நக்கீரரே, அகநானூறு 306ஆம் பாட்டையும் பாடியுள்ளார்; வரலாற்று ஆசிரியர்கள் யாரும் இந்தப் பாட்டைக் கருத்தில் கொள்ளவே இல்லை. இந்தப் பாட்டில், பொலம் பூண் கிள்ளி எனவும் அழைக்கப்யெறும் கிள்ளிவளவன், விரைந்து பாயும் குதிரைப்படை, களிற் றுப் படைகளைக்கொண்ட பெரும் படையோடு வந்து கூடல் மாநகரைத் தாக்கினான். ஆனால் கோசர் படைத் தலைவன் பழையன் மாறன் தன் தேர்ப்படை, யானைப் படைகளோடு சென்று கூடல் மாநகருக்கு அணித்தாக அச் சோழனை வென்று, அவன் கொண்டு வந்த குதிரைப்படை களிற்றுப் படைகளைக் கவர்ந்து கொண்டதோடு, சோழ னுடையவும், அவனுக்குத் துணை வந்த பிற அரசர்களு டையவுமான பல ஊர் களைக் கவர்ந்து கொண்டான். பழையன் மாறனிடம் சோழன் பெற்ற இப் பெருந்தோல்வி அறிந்து, அச் சோழர் குலப் பகைவனாகிய, சேரர் குலக் கோக் கோதை மார்பன் மகிழ்ச்சி அடைந்தான்' என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. - 54