பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறியவாறு கூறாமல் மாறாக, “உழுது, உண்டு, தின்று, ஓடி, பாடி வந்தான்' எனக் கூறினால், கூற வேண்டிய பொருளிலும் குறைநேரவில்லை; அதே நிலையில் சொற் றொடர் இனிமையும் பெறுகிறது. அவ்வாறு வினையெச் சங்களை அடுக்கிக்கொண்டே சென்று, இறுதியில், ஒரு முற்று வினையால் அத்தொடர் முடிக்கப்பெற்றால் தான், அ த ற் கு முன் அடுக்கிக்கூறப்பெற்ற வினையெச்சங்கள் உணர்த்தும் வினைகளும் முடிக்கப்பெற்றனவாகும். அவ்வாறின்றி, நம் தந்தையார் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி, பெரிய கிணறு வெட்டி, மின்சார நீரேற்றுவான் அமைத்து கரும்பு நடவு செய்ய விரும்பிய நிலம் இதுதான், எனச் சொற்றொடர் அமைந்தால், தந்தையார் விரும்பி யது உண்மையாக இருக்கலாம்; ஆனால், அவர் விருப்பம் நிறைவேறிற்றா? நிலம் வாங்கப்பட்டதா? கிணறு வெட் டப்பட்டதா? நீர் ஏற்றுவான் நிறுவப்பட்டதா? கரும்பு நடவு செய்யப்பட்டதா? என்பதற்கு விடை காணல் இயலாது; தந்தையாரின் விருப்பம் வெறும் விருப்பமாகவே இருந்து கழிந்துபோக, வாங்குவதும், வெட்டுவதும், நிறுவுவதும், நடவு செய்வதும் நிகழாமலே போயிருக்க வும் கூடும், அதேபோல், பொலம்பூண் கிள்ளி, கோசர் படையை நூறி, அவர் நிலத்தைக் கைக்கொள வெஃகியது உண்மை யாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேறிற்றா, அல்லது வெறும் ஆசையாகவே போய் விட்ட தா, என்பதை அறுதி யிட்டுச் சொல்ல இயலாது; அதை முடிவு செய்ய, வேறு அகச் சான்றின் துணையினை நாடவேண்டும். - ஆய்வாளர் தம் கடமை : வரலாற்று ஆசிரியர்கள், ஒரு நிகழ்ச்சி பற்றி முடிவு எடுக்கும்போது, அந் நிகழ்ச்சி பற்றித் தமக்குக் கிடைத்த 53