பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஊரார்கள் நம்மை எல்லாம்
உமிஎனநினைத்தார்போலும்!"(147)

                       என்பன போன்ற உவமையழகுகள் கவிதையை அணி செய்கின்றன.

"இன்றைய நிலையை மாற்ற
இறப்பதா?வேண்டாம்;வேண்டாம்!
கொன்றிட வேண்டும் தீமை
குறுக்கிட்டால்!எடடீ வாளை(26)

என்றும்,

"

....... .......மூட
வெள்ளத்தை மீன்போல் பெண்கள்
எதிர்த்திடில் அடிமை எல்லாம்
தள்ளுண்டு போகும்!...."(30)

என்றும்,

"....... பெண்வி ழித்தால்
விடுதலை நிலைக்கும் நாட்டில்!"(58)

என்றும்,இவை போன்றும் கருத்துக்கள் சிந்தனைக்கு விருந்தென இனிமையூட்டி நிற்கின்றன.

கவிதை ஆற்றொழுக்குப் போல் தங்கு தடை இன்றித் தெள்ளிய தனித் தமிழ் நடையில் செல்லும் பாங்கு பெரிதும் போற்றற்குரிய தாகும்.

இந்நூல் இளைஞருலகம் விழிப்புணர்ச்சி பெற்று விட்டது என்பதற்கோர் எடுத்துக்காட்டு. தமிழர்கள் 'தமிழச்சி'யைக் கண்டால், அவள்மாட்டுக்'காதல்' கொள்வார்கள் என்பது உறுதி. எனவே, வாழ்க 'தமிழச்சி'! 'வாழ்க கவிஞர் வாணிதாசன்!

1 -9- 48

சென்னை

-இரா.நெடுஞ்செழியன்