பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

viii

திராவிடத்தைக் காணும் குறிக்கோள் ஆகிய இன்ன பிற தன்மைகள் எல்லாம் அவள் மாட்டுப் பொதிந்து கிடக்கின்றன. இத்தகைய மாண்புடைய 'தமிழச்சி'யைத்தான் கவிஞர் வாணிதாசனின் பேனாமுனை சொல்லோவியமாகத் திறம்படத் தீட்டிக் காட்டுகிறது.

இக் கவிதை ஒரு சமுதாய சீர்திருத்தக் கதையாகும். கதை இறுதி வரையில் விறுவிறுப்புடன் செல்கிறது. "சிற்றூர்ப் பெண்கள் திருந்தினால்தான் நாடு திருந்தும்" என்ற நோக்கத்தோடுதான் இக் கவிதை இயற்றப்படுவதாக ஆசிரியரே கூறியுள்ளார். அந் நோக்கம் இந் நூலின் கண் நன்கு நிறைவேற்றப்படுகிறது.

இயற்கையின் தோற்றத்தையும், அதன் எழிலையும் பற்றிக் கூறவரும் இடங்களில் எல்லாம் ஆசிரியர் மிக மிக அழகாகவும், நெஞ்சை யள்ளும் வகையிலும் கட்டிக் காட்டுகிறார்.

கலையழகு ஆங்காங்குக் கொழித்துக் கிடக்கின்றது கவிஞர் கொடுக்கும் உவமைகள் புதுமையாகவும், பொருத்தமுள்ளனவாகவும் காணப்படுகின்றன.

"பொரியுண்டை என உம் முள்ளே
பெண்களை நினைத்தீர் போலும்" (8),
பொன்னனின் கருங்கல் தோளைத்
தமிழச்சி புரட்டிச் சொல்வாள்:" (52),
.......  .........கள்ளின்
மொந்தைபோல் முகம்பா ழாக ” (63),
"இருட்டிய வீடு போல
இருந்தனன் .... .....(69),