பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் 7

ஊராரின் முறையீடு

நாட்டாண்மைக் காரர் தேடி
நாலுபேர் வந்தார்: "ஐயா!
கேட்டீரா செய்தி ? சேரி
கெட்டிடும் போலும் இங்கே!
கூட்டமாய்ப் பேசு கின்றார்!
குடிப்பதை நிறுத்தி னாராம்!
ஏட்டினைப் படிக்கின் றாராம்!
ஏதேதோ செய்கின் றாராம்! 72

"காலையில் முழுக்குப், பூசை,
கதிரவன் வணக்கம், தங்கள்
சீலைகள் தோய்த்துக் கட்டல்,
சிறுவர்க்குத் தலையை வாரிச்
சாலைக்குக் கல்வி கற்கத்
தப்பாது விடுத்துப் பின்னர்க்
கூலிக்குப் போவ(து) என்ற
கொள்கையில் நடக்கின் றாராம்!73

29