பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"கண்டித்துப் பார்த்தேன் நானும்;
கவனிக்க வில்லை சேரி ;
'பண்டிகைக் காக நாங்கள்
படிக்கிறோம் தெருக்கூத்(து)' என்று
நொண்டிச்சாக்(கு) உரைக்கின் றார்கள் ;
நுணுக்கமாய்த் தெரிந்து கொண்டு
சண்டிசெய் யாது விட்டேன் ;
காலமோ சரியாய் இல்லை!77

"'தமிழச்சி இவைகட்(கு) எல்லாம்
தலை'என்று கேள்விப் பட்டேன்;
'உமைச்சும்மா விடவே மாட்டேன்;
உன்மகள் கொட்ட மெல்லாம்
சுமையாக வந்து சேரும்'
என்றுநான் கடிந்து சொன்னேன் ;
'எமக்கவள் அடங்காள் ! ஊரார்
அடக்கட்டும்!'என்றான் பெற்றோன். 78

"தமிழச்சி சொல்லைச் சேரி
தட்டாதாம் ! அதனால் நாமோ
அமைதியாய்க் கொக்கைப் போல
அசையாது காலம் பார்ப்போம்;
நமைவாட்டும் இந்தக் காலம்
நலியும்நாள் தொலைவில் இல்லை;
இமயம்போல் வலிவுண்(டு) என்றார்".
வந்தவர் எழுந்தே போனார்!79

31