பக்கம்:தமிழஞ்சலி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி "பூமியே! நீ கொடுங்கோலை ஏந்தினால், புரண்டு வரும் கடலலைக் கோள்களால், உன்னைப் புதை குழிக்கு அனுப்புவேன், ஜாக்கிரதை' கடல், தனது அலையோசையெனும் அபாய முழக் கங்களால், அவ்வப்போது ஓயாமல் - ஒழியாமல், எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல, அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இன்றைய ஜனநாயகமானாலும் - இயற்கையின் தத்துவ முறையானாலும் - இரண்டிலும், ஜனநாயக உள்ளம் தவழ்வதைப் பார்க்கிறோம். அறிஞர் அண்ணாவின் உள்ளமும் - கடல் போன்றது! இன்றைய ஜனநாயகத் தத்துவத்தை, அடிப்படையாகக் கொண்டதாகும். ஜனநாயகத் தத்துவத்திற்கு ஆபத்தை உண்டாக்குவோர், அவர்கள் - எவரானாலும் சரி, தனது கடல்கோள் போன்ற எதிர்ப்பால், அவர் அந்த அபாயத்தை அழித்துவிடும் ஆற்றல் பெற்றவராவார். பெரும்பகுதி தண்ணீரை வைத்திருக்கும் கடல் நீரில்: குளிர்ச்சிக்குப் பதில் வெதவெதப்பு இருக்கிறது. அறிஞர் அண்ணாவின் சீதளத் திரள் செறிந்த அறிவில், இயற்கையாகவே வெதவெதப்பு இருக்கிறது. அதன் விளைவுதான்: அண்ணா அவர்களால் குளுமையாகவும் பேசமுடிகிறது - அந்தக் குளிர்ச்சியிலே மெய்மறந்து போவார்களேயானால், செயல் தடைபடும் 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/106&oldid=863447" இலிருந்து மீள்விக்கப்பட்டது