பக்கம்:தமிழஞ்சலி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி வானம் போன்ற உயர்வு, அத்தகைய மனித மேதைகளைக் காதலிக்கும். கடலையொத்த ஆழமான உணர்ச்சி, அந்த வானத்தைத் தாவித் தாவிக் குதிக்கும். இவை விஞ்ஞான அடிப்படையிலே எழுந்த உண்மைகளாகும். இந்த உலகம், இளகி - இறுகும்போது முன்பு, தேக்கி வைத்துக் கொண்ட முதல் சொத்து - கடல். தரணி, முக்கால் பங்கு நீராலும் - கால் பகுதி நிலத்தாலும் உருப்பெற்று விளங்குகிறது. இது, இடைக்காலத்திலே, யாரோ ஒரு மனிதனாலே, கண்டுபிடிக்கப்பட்ட ஜனநாயகத் தத்துவமல்ல; இயற்கையின் அடிப்படைத் தத்துவமாகும். இன்றைய ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட ஒரு கட்சி; நாட்டை ஆட்சி செய்கிறது. சிறுபான்மைக் கட்சிகள் எதிர்க்கட்சிகளாக இயங்கிச் சித்ரவதைக்கும் ஆளாகின்றன. இவை ஜனநாயகத்தின் பெயரால் நடக்கின்றன. இயற்கையின் ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட கடல், உலத்தை அடக்கி, ஆண்டு, ஆட்சி புரியவில்லை. எதிர்க்கட்சியைப்போலுள்ள பூமிதான், மக்களை ஆட்சி புரிகிறது. வளமாக வாழ வைக்கிறது. சிறுபான்மைக்கு சிறப்பான தகுதியை வழங்கியதோடு -பெரும்பான்மை நின்றுவிடவில்லை. 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/105&oldid=863446" இலிருந்து மீள்விக்கப்பட்டது