பக்கம்:தமிழஞ்சலி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி கொந்தளிக்கும் கடலிலிருந்து மின்சாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சித்துக் கொள்ள வேண்டுமே தவிர, கரிக்கிறதே கடெலன்று கருதி - கடல் மீது போர் தொடுக்கக் கூடாது: அண்ணாவின் அறிவுரைகளிலிருந்து நாட்டுக்குரிய நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, அவர் கட்சித் தலைவர் என்பதற்காகப் - புறக்கணிக்கக் கூடாது; அது புத்திசாலித்தனமுமல்ல! கடலைக் கூர்ந்து கவனித்தால், அதனுடைய ஆழம் அளப்பரிய தூரத்திலிருந்தாலும் - நீர்மட்டும், மக்கள் வாழும் நிலப்பகுதியோடு ஒன்றியிருப்பது தெரியும். ஆழ்ந்த அறிவுடையோர், எப்போதும் மக்களுடன் சரி சமமாகவே இருப்பார்கள். அந்தஸ்து - பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதைத் தவறாகக் கணக்கிட்டுக் கொண்டு, ஆழத்தை மேடென்று நினைத்து ஏறினால், அவர்களுடைய பயணம் பாதாளத்தை நோக்கித்தான் நடக்கும்! அதோ அந்தக் கடல், அடிவானத்தின் உதட்டை, அனாதிக் காலந்தொட்டுச் சுவைத்துக் கொண்டிருக்கிறது. எங்கு நோக்கினும் பரந்த விரிந்த நீர்த் தகடு, அமைதியோடு; தொடு வானத்தைத் தழுவசிக் கொண்டிருக்கிறது. இந்த மயக்கக் காட்சியிலிருந்து பாடம் பெற வேண்டியவர்கள், அதை மாயை' என்று கூறி, பதம் குலைந்து விடுகிறார்கள். 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/108&oldid=863449" இலிருந்து மீள்விக்கப்பட்டது