பக்கம்:தமிழஞ்சலி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி நான், தலைதுாக்கி வான்முகட்டை நோக்கினேன். அப்போது ஒரு சிப்பி, வான் துளியைக் கவர்ந்து கொண்டு - மூடிய வாயைத் திறக்காமல் - கடலின் அடிவயிற்றை நோக்கி வந்து கொண்டிருந்தது. 'சிப்பியே! என்றேன். ஆக்க வேலை அதிகமிருக்கிறது - பயணத்தைத் தடுக்காதே! என்று, கீழ் நோக்கிப் போய்க் கொண் டிருந்தது. இதனை வாயால் கூறிற்று என்று நினைக்காதீர்கள் - மவுனத்தால் கூறியபடியே போய்க் கொண்டிருந்தது. அறுந்தப் பட்டத்தை நோக்கிச் சிறுவர்கள் துரத்திக் கொண்டு போவதைப் போல - நீரில் அலைபாய்ந்து செல்லும், நான் சிப்பியை நோக்கி, ஒட ஆரம்பித்தேன். சிப்பி, கடல் பஞ்சின் குகையில் வந்து அடங்கியது. நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன். ‘என்ன செய்து கொண்டிருக்கிறாய் சிப்பியே! என்று கேட்டேன். புதிய நீர்த்துளி விசும்பைவிட்டு நழுவிற்று; அதனைப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டேன். என்றது. 'இதற்கு மேலே என்ன செய்யப் போகிறாய்? என்றேன். நான் குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்து, இதனை நல்முத்தாக்கி வெளியே விடப் போகிறேன் என்றது. அறிஞர் அண்ணா அவர்களும், வானத்திலிருந்து நீர் விழுவதைப் போல - புதிய பிரச்னைகள் கீழ் நோக்கி I O 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/111&oldid=863453" இலிருந்து மீள்விக்கப்பட்டது