பக்கம்:தமிழஞ்சலி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி விழுகிற நேரத்திலெல்லாம், சிப்பியாக நின்று - அதைக் கவர்ந்து விடுகிறார். மலரில் விழுந்த நீர்த்துளி, பனித்துளியின் உருவோடு தேனாகிறது. முத்துச் சிப்பியில் விழுந்த நீர்த்துளி, நீரைப்போல இளகி இல்லாமல், இறுகியிருக்கிறது. அதனைத்தான் நாம், முத்து என்கிறோம். தழில் விழுந்தால் தேன் - சிப்பியில் விழுந்தால் சில அரசியல் தலைவர்கள், பிரச்சினைகளைத் தேனைப் போல ஆக்கி, எறும்பைப் போலுள்ள சாதாரண மனிதர்களிடம் கூடத் தெரிவித்து விடுகிறார்கள். அறிஞர் அண்ணா போன்றவர்கள்தான், சிப்பியை போல அந்தப் பிரச்னையை, அமைதியான இடத்தில் வைத்து - சிந்தித்து அதே பிரச்னையைப் போல, திட்டத்தையும் தீட்டுகிறார்கள். வான், நீர்த்துளியாக இருந்தால், சிப்பியில் ஒரு முத்து தான் இருக்கும். அதாவது தெளிவானப் பிரச்னைகளுக்கே, முத்தான திட்டங்களாகும். வயிற்றெரிச்சல் காரணமாகப் பிரச்னைகளைச் சிதறுகின்ற தன்மையில் பேசுகின்றவர்களுக்கு, அறிஞர் அண்ணாவின் சிப்பித் தன்மை அமைவதில்லை. அவரை நோக்கி வருகின்ற பிரச்னைகளை - அவர் தள்ளி விடுவதுமில்லை. பக்கத்திலிருந்த சிப்பி, ஏற்கனவே அடிவயிற்றில் சுமந்திருந்த நீரை முத்தாக்கி, உலகுக்குப் பரிசளிக்கத் 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/112&oldid=863454" இலிருந்து மீள்விக்கப்பட்டது