பக்கம்:தமிழஞ்சலி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 'இந்தச் சூடு, அந்தத் தண்டுக்குள் எப்படி வந்தது? உனக்குத் தெரியுமா? என்று, பேசிற்று. வைதீகனாக இருந்தால் எல்லாம் கடவுள் செயல் என்பாய். உன்னைப் பார்த்தால் பகுத்தறிவுவாதி போல இருக்கிறாயே! என்றது. நான் விழித்தேன். ஒரு கரு வளர்வதற்கும் - அது வளர்ந்து உரு பெறுவதற்கும் - சூடும் குளுமையும் தேவை. இப்போது நான் வளர்ந்திருக்கிறேன் என்றால், இந்தச் சூட்டாலும் குளுமையாலும்தான். 'இந்தச் சூடு எனக்கு எப்படி வந்தது என்றால், என் உடல் பூராவும் இருக்கின்ற செல் என்ற உயிர்ப்புச் சக்தி - சூரிய ஒளியால், சூடான நீரில் இருக்கின்ற, வெதவெதப்பை உறிஞ்சிவிடுகிறது. அதன் விளைவுதான், நான் நீரால், சூழப்பட்டிருந் தாலும், எனது உடல் - எப்போதும், வெதவெதப்பாகவே இருக்கிறது என்றது. அறிஞர் அண்ணா அவர்கள், நீரால் சூழப்பட்ட கட றி செடி யைப் ேட | ல , பாத கம் விளைவிக்கின்றவர்களுக்கு மத்தியில் இருக்கின்றார். உதயசூரியன் - மதிய சூரியனின் அருள் கேட்டு துடித்துக் கொண்டிருக்கும் பல கோடி ஏழை மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் துன்பச் சூட்டை நன்குனர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள்; அந்தத் துன்பத்தை மட்டும் - தான் i 05

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/115&oldid=863457" இலிருந்து மீள்விக்கப்பட்டது