பக்கம்:தமிழஞ்சலி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி திருவே! என் செல்வமே! என் புகழே, நீ! செழுஞ்சுடரே செழுஞ்சுடரின் சோதியே நீ! உருவே! என் உறவே! ஊனே! ஊனின் உள்ளமே! உள்ளத்தின் உள்ளே உரைகின்ற உயிரணுவே! என் அறிவே! கண்ணே! கண்ணின் கருமணியே! மணியாடு பாவாய், நீயே! பகைவர்க்குத் தீ, நீ தகிப்போர்க்கு நீர், நீ! எளியோர்க்குத் திண்மை, நீ வழி பிறழ்ந்தார்க்குத் திசை, நீ அந்தத் திசையில் திகழும் இயற்கை, நீ இயற்கையின் எழில் நீ! விண் நீ! விண்ணில் ஒளிரும் மின், நீ ஞாயிறும் திங்களும், நீ காய் நீ கனியின் நின்ற சுவை நீ! மணம் விரவும் நுகர்ச்சி நீ நிலை குலையா அரசியலும் நீ! நான் - நீயாகி, நேர்மையாகி, நெடுஞ்சுடராகி, நிமிர்ந்து நிற்பதற்கும் வேண்டும் - நீயே! நாட்டினர் விரும்புகின்ற சோசலிச வித்தும் நீ! அமைதியான அரசியலுக்குரிய ஜனநாயகத் தாய் நீ! வறியவர்கட்கும், உழைப்பவர்கட்கும், சுற்றம் நீ! பொன் செயும் பொருளாதாரத் தத்துவம் நீ! மன்பதைக்குத் துணையாகும், அமைதி நீ! } 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/123&oldid=863466" இலிருந்து மீள்விக்கப்பட்டது