பக்கம்:தமிழஞ்சலி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி நீ! அறிவொளியால் எமை ஆட்கொண்ட அருட்செல்வன், 'வசவாளர் வாழ்கவென, வைதாரை வாழ்த்தியவன் திருவிடத்தின் முழு உருவம் தந்தாய் நீ! ஒசை ஒலியெலாம் ஆனாய் நீ! ஒண்டா உள்ளங்களில் ஒடுங்கினாய் நீ! மலைமுகடு மாருதத்தின் மென்மையெலாம் நீ! பிழைத்தாரைப் பொறுத்தருளும் பொறுமையே நீதான் தேசப்பற்றெலாம் தேக்கமாய் நின்ற ஒளி நீ! கல்லாதார் மனக் கண்ணைத் திறப்பவன் நீ! பொல்லாத நெறிமுறைக்கு வெல்லாத வைரி நீ! பொல்லாங்கை வீழ்த்துகின்ற பகையும் நீ! நில்லாத ஆணவத்தின் கடும் வலிவைத் தகர்த்த மாறன் நீ! செல்லாத அரசியலைச் சரிய வைத்த தந்திரி நீ! செந்தமிழின் காவலனாய் நின்றவனும் நீயே! குறளெனச் சிறு உருவம் கொண்டாய் நீ! கண்டு தமிழுண்ட சங்கத் தமிழ் மேதை நீ! இழையான சொற்களைப் பிழை நீக்கி ஆள்வோய் நீ! இச்சைக்கு வளையாத இல்லறத் துறவி நீ; இல்லந்தோறும் வித்தைத் தூவினாய் நீ! } 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/125&oldid=863468" இலிருந்து மீள்விக்கப்பட்டது