பக்கம்:தமிழஞ்சலி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி மணம் நிறைந்த காற்றாக - இளம் வேனிலாக, நீ. சில்லென்று என்னை விசிறி விடுகிறாய்! மனதை மயக்கும் மாலைப் பொழுது: உனைக் கண்டு மகிழ்வுறுவதைப் பார்க்கிறேன். காதல் கனிந்த காரிகையர்கட்கு உன் வரவு சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரிப் பொழிந்ததைப் போன்றதாகி விடுகிறது. தேன் வெறி பிடித்த வண்டுகள், அப்போது எழில் மலர்களை முத்தமிடுகின்றன. சிரிக்கும் பொழுது பற்களை பீறிக் கிளம்பும் வெண்மை நிற ஒளியொத்தக் குருக்கத்திப் பூ : மலர்ந்து மனம் பெறுகிறது. பண்தேரே! காதல் என்ற மன்னன் உன்னைக் கண்ணுற்ற பின்தான், நீ கன்னிப் பெண்களை வேட்டையாடப் புறப்படுவதாகத் தமிழ் இலக்கியங்களிலே படித்திருக்கிறேன், நான். வெண்ணிலா உனது குடை வசந்தம் அமைச்சன்! உன் புகழேற்றும் இசைவாணர்கள் குயில்களாமே! பலாச மலர்கள் உனது வில்லா? வட்டமிட்டொலிக்கும் வண்டினங்கள் நானா? மாந்தளிர்கள், அம்புகளா உனக்கு? ஆகா! உன் பெருமையை எப்படிச் சாற்றுவேன் இளங்காற்றே! தென்னலே காதல் மன்னன் உன்னைக் குஞ்சரமாக ஊர்ந்து பவனி வருகிறானாமே! 128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/138&oldid=863482" இலிருந்து மீள்விக்கப்பட்டது