பக்கம்:தமிழஞ்சலி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. அலைகளிை சபாஷ் யானையின் பலம் உனக்குண்டோ அப்போது உன் மதிப்பு உரைக்கவொனாததன்றோ. தென்றலே! நீ பிறந்த இடத்தை விட்டு வருகிறபோது மலர்க் காடுகளைக் காண்கிறாய்! காவைக் கண்டிருப்பாய்! கன்னல் - செந்நெல் காடுகளையும் பார்த்திருப்பாய்! அல்லி உனைக் கண்டு சிரிக்குமாம்! தாமரை என்ற அரசியல் நோயாளிகள் அச்சத்தால் கூம்பி விடுவார்களாம்! ரோஜா ஆலவட்டம் வீசுமாம்! மல்லி மஞ்சம் விரித்தி ருக்குமாமே - உனக்காக, இது உண்மைதானே இன்பக் காற்றே: ஆஹா. ஹா! உன் அழகே அழகு! அழகு சிசித்தா டும் மலர்களையே, நீ, தன் வயப்படுத்திக் கொள்ளும் சக்தி படைத்திருக்கிறாயே! என்னே உன் ஆற்றல்; அன்பு: பண்பு! வரும் வழியில் இத்தனை இயற்கை அழகுகளைக் கண்டு புளகாங்கிதமுற்ற நீ, அதோ இருக்கும் அந்த இருண்ட காட்டில் நுழைந்தாயா? புகுந்திருப்பாய், புகுந்திருப்பாய் உன்னைத் தடுப்பவன் யார்? நீதான் எங்கும் நுழைபவனாயிற்றே! அந்த இருண்ட காடு தான், எனது சமுதாயம்! என் சமுதாயம் காடாகத் திகழ்ந்ததால், அங்கே சேறும் - சகதியும், காணப்படுகிறது. அந்த நாற்றத்தை உனது சீர்திருத்தக் கொள்கையால் சீர்படுத்துகிறாய் நீ!

  1. 29
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/139&oldid=863483" இலிருந்து மீள்விக்கப்பட்டது