பக்கம்:தமிழஞ்சலி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி புன்னைப் பூ அழகானது என்றாலும், சிறு காற்றையும் தாங்க முடியாமல் தலை கவிழ்ந்து கீழே உதிர்வதைப் போன்ற என் சமுதாய பலவீனர்கட்கு, வைரம் பாய்ந்த தேக்கின் பலத்தையும் - வளத்தையும் வழங்கிட நினைப் பாயா நீ? அவற்றின் உடல்களை ஆரோக்கிய முறையிலே வளர்க்க - சந்தனக் காற்றை நீ, ஊட்டுவது ஏன், என் பதை அறிந்தேன். மூங்கில் மூலமாக இசையை எழுப்பி, அவர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளிக்கிறாய். இவையும் சீர்திருத்தமல்லவா? பொதுநலத்தொண் LAAഖIITP தென்றலே! இந்த உதவிகளை இருண்ட காட்டுக்கு மட்டுமா செய்கிறாய்? நோய்வாய்ப்பட்ட நம் சமு தாயத்திற்குமன்றோ கூலிபெறாமல் புரிகிறாய்! நீயன்றோ நீனிலம் புகழும் சீர்திருத்தவாதி உன் சேவை நீடு புகழ் வாழ்க! வளர்க நின் கடமை உள்ளம், சிறுகாலே சந்தனக் காட்டிலே நீதவழ்ந்து வரும்போது 'பூவை அணைக்கிறாய்! 'பூ' என்றால், பூமி, உலகம்தானே பூவான பூமியை - உலகத்தை, நீ கட்டி அணைக்கின்றாய். பூவை நீ அணைக்கும்போது, அதனுள்ளிருக்கும் தாதுவான மகரந்தத்தையும் அன்றோ - மகிழ வைக்கிறாய்! அந்த தாதுக்களும், உன்னை உளமார சிரித்து, வாழ்த்தியன்றோ, இனிமையாக வரவேற்கின்றன: | 3 ||

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/141&oldid=863486" இலிருந்து மீள்விக்கப்பட்டது