பக்கம்:தமிழஞ்சலி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி பூவான பூமியை, நீ அணைத்து உலா வரும்போது, அந்தப் பூமியில் வதியும் மகரந்தம் போன்ற மக்களும் - உன்னைக் கண்டு இதயப்பூர்வமாக சிரித்து, வாழ்த்தி, வரவேற்கிறார்கள். தென்றலே நீயும் மனித இனத்தின் உள்ளங்களை ஆட்கொண்டு அவர்களை அகமகிழ வைக்கின்றாய்! மக்கள் உள்ளமும் மலரைப் போன்று மென்மையானது அல்லவா? அதனாலன்றோ, அவர்கள் உன்னைக் கட்டித் தழுவி ஆர அனைத்துப் பூரிக்கிறார்கள். தென்றலே! நீ யார்? ஏனென்றால், உன் பெயரை மட்டும் தான், நான் கேட்டிருக்கிறேன். உன் ஊர், தாய் தந்தையர் பெயர் தெரியவில்லை! ஏதோ அருவமாக மாலை நேரங்களில் வருகிறாய்! குறிப்பிட்ட வசந்த காலத்தில்தான் - என் அகக் கண் னால், உணர்வால், நான் உன்னைக் காண்கின்றேன். நேரில் பார்க்கலாமென்றால்தான் முடியவில்லையே! நீ ஆணா பெண்ணா என்று, என்னால் அறிய முடியவில்லை! புலவர்கள் உன்னைப் பெண் என்று கூறுகிறார்கள். 'தென்னன் என்ற பெயரும் உனக்கு உண்டல்லவா? அதனால் நீ ஆணாக இருப்பாயென்று நம்புகிறேன். ஆணாக இருந்தால் நீ பெண்ணைக் காதலிக்க உரிமையுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/142&oldid=863487" இலிருந்து மீள்விக்கப்பட்டது