பக்கம்:தமிழஞ்சலி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி எழுத்தை நினைக்கும்போது ஓர் அறிஞனுடைய நினைவு வருகிறது. பேச்சு, ஓவியம், இசை, இவற்றை நினைக்கும்போது ஒவ்வொருவருடைய நினைவும் நமக்குத் தோன்றுகிறது. ஞாபகம் என்பது காலத்தின் வேராகும். அண்ணாவை நினைக்கும்போது எது நினைவிற்கு வருகிறது? பேச்சா? எழுத்தா? நாடகமா? உரையாடலா? அன்பா? பண்பா அரசியலா? அவரது அழகான தமிழா? அற்புதமான ஆங்கிலமா? எல்லாத் துறையிலும் ஒரு மனிதனை நினைக்கிற நேரத்தில், நமக்கு இப்படி ஞாபகம் வருகிறதென்றால் - இதற்குப் பெயர்தான் என்ன? சர்வ வல்லமையா? சர்வ வல்லமை என்பது இறைவனுக்குத்தான் பொருந்தும் என்று, எண்குண ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்களே என்று கேட்டால், முழு மனிதன் இறைவனை விட்டுக் குறையனாகவா பிறந்தான்? இறைந்து இருப்பவன் இறைவனென்றால், எல்லா வல்லமையிலும் இறவாது இறைந்திருப்பவன் அறிஞன் என்று, வேதாகமம் கூறுகிறதே! இந்த இடத்தில்தான், காலம் எப்படி அண்ணாவால் தன்னை, மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிறது என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/15&oldid=863495" இலிருந்து மீள்விக்கப்பட்டது