பக்கம்:தமிழஞ்சலி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி காலத்திற்குத் தேவையான உணவை - அறிஞர் அண்ணாவைப் போல் அளிப்பவர்கள் இனி இல்லை. கட்சிக் காதல் அல்ல இது அறிவின் மீது நம்பிக்கை வைத்து, வாழ்க்கை நடத்துகின்றவன் செய்கின்ற - சரியான விமர்சனம். அண்ணா பிறந்தது 1909-ல் அவர் அறிவு தோன்றியது எப்போது? - அண்ணா இறந்தது 1969-ல், அவர் நினைவு முடிவது எப்போது? இந்த இரு வினாக்களுக்கும் இன்றைய தினமிருக்கும் வேதாந்திகளாலேயே பதில்கூற முடியவில்லை. றிஞர் அண்ணாவைத் தாக்கி எழுதுகின்ற| ای و لa) تا 67 சித்தாந்திகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எந்த விதையால், அண்ணா தன்னை மனிதத் தோட்டத்தின் நடுவில், நிழல் தரும் தருவாக, ஆக்கிக் Gg#ffizi TLftffP அந்த விதையை, முதன் முதலில் போட்டக் காலத்தைநான் கையெடுத்துக் கும்பிடுகின்றேன். ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ரக விதையால் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். கலை, ஓவியம், இசை, பேச்சு, எழுத்து, இவை அத்தனையும், மனித தோட்டத்திற்கு நடுவில் விழுகின்ற விதைகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/14&oldid=863484" இலிருந்து மீள்விக்கப்பட்டது