பக்கம்:தமிழஞ்சலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி நபிகள் நாயகத்தை மூலமாக வைத்து - முளைத்தக் காலமும் உண்டு. வள்ளுவப் பெருமானை வைத்து, வாழ்ந்து, வளர்ந்து - மென் மேலும் வளர்ந்து கொண்டே, இருக்கின்ற காலமும் உண்டு. விவேகம் விளைந்தவர்கள் , மேற்குறிப்பிட்ட மேதைகளை விழுங்கிய காலத்தை, வாழ்த்தியதில்லை. அப்படிப்பட்ட ஊழிப் பெருமக்களை விழுங்கிய அதே காலம் - அவர்களை எருவாக வைத்தே - எப்படி இன்றைய தினம் வரை வளர்ந்து கொண்டே வருகிறது? தர்க்கரீதியான வினா இதுவென்றால், இதே கேள்வி அண்ணா விஷயத்திலும் எட்டிப் போய்விடவில்லை. எழுதி முடித்த ஒரு கட்டுரையை, இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் படித்தால், அது பழையதாகத் தோன்றும். உண்மையில் அது பழையதல்ல - புதிய அறிவு வளர்ந்திருக்கிறது என்றே பொருள். ஆனால், இயேசு - புத்தர் - நபி - வள்ளுவர் இவர் களுடைய கருத்து, நாள்தோறும் புதிது புதிதாகத் தெரி வானேன்? இந்த இடத்தில்தான், காலம் - இவ்வளவு நோஞ்சா னாக இருக்கிறதே, என்ற கேள்வி எழுகிறது அந்தக் காலத்திற்குத் தீனியிட்டு வளர்க்க வேண்டிய பொறுப்பு, அறிஞர் பெருமக்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/13&oldid=863473" இலிருந்து மீள்விக்கப்பட்டது