பக்கம்:தமிழஞ்சலி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி பகல் நீ சொற்களே உன்னிடத்திலிருந்து கிளம்புவதால்! சோதி நீ சோதனை உன்னிடத்திலே இருந்து எழுவதால் ஒளியை உமிழ்வதால்: திவாகரன் நீ அறிவொளிப் பிரவாகம் உன்னிடமிருந்தே எடுப்பதால்! அரியமா நீ கீழ், அடிவானத்திலிருந்து எடுப்பதால்! அரிமா நீ கீழ், அடிவானத்திலிருந்து மேல் வானத்திற்கு ஒடுகின்ற குதிரை, மனித இனத்தின் தந்தை நீ! நீ உதயன் ஜீவனின் உற்பத்தி. நீ ஞாயிறு சிலப்பதிகார ஆசிரியர் உன்னைப் போற்றினார்! கடவுளுக்குப் பதிலாக! எல்லை நீ அண்டத்தின் வரைகோடு! கிரணமாலி நீ கிரணத்தை ஆக்குபவன் ஏழ்பரியோன் எழுகின்ற காரணத்தால். வேந்தன் உலகை நீ ஆளுவதால். விருச்சிகன் சுடரவிழ்க்கும் தலைவனானதால்! விண்மினி, உயிர்களுக்கே நீ கண்மணி! அருக்கன், வாழ்க்கைச் சுடரை உலகிற்கும் பெருக்கு வதால்! அப்படியானால் நான் யார்? எங்கே முளைத்தவனோ? எதற்கோ வந்தவனோ? நானே அதை அறிய முடியவில்லை! 153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/163&oldid=863510" இலிருந்து மீள்விக்கப்பட்டது