பக்கம்:தமிழஞ்சலி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அந்தியிலே நீ சாயும்போது, எனது வீரம் அதே பணிவோடு உன் காலடியிலே வீழ்கிறது! மாலை நேரத்தில் வீடுகளில் கொளுத்துகின்ற ஒரு சாண் திரியொளிக்கு, வாய்ப்பளித்துவிட்டு, நீ பதுங்குகின்ற தன்மையைப் பார்த்தால்; உனது பெருந்தன்மை எனக்குப் புரிகின்றது. என்னுடைய இளமைக் காலம் முழுவதும் பகலாக இருக்குமானால்.... அட....டே..... பேராசை! அலையின் மீது மத்தளம் தட்டும் உனது கரங்கள் - புயற்காற்றின் குடுமியைப் பிடித்து உலுக்குகின்றபோது - வீரம் விளக்குகின்ற உனது வியன் மிகு அரசியலை, நான் புரிந்து கொள்ள முடிகின்றது. பருவ காலங்களில், நீ மலையின் மீதும் அருவினியின் தோள்மீதும் - மலரின் உதட்டின் மீதும் - தும்பியின் இறக்கைகள் மீதும் - கேட்பாரற்றுக் கிடக்கும் காளான்களின் மீதும் - செந்தூர வண்ணங்கொண்டு நீ படரும் போதும் - எங்கோ முளைத்திருக்கின்ற எனக்கு விடுதலை கிடைத்ததைப்போல உணருகிறேன். பாலைவனத்திலே காய்கின்ற உனக்குப் பொழிலுக்கு இடையில் வேலை என்ன? அழிவுக்கு முன்னால் அழுதுவிட்டு, களிப்புக்கு முன்னால் களிக்கின்றாயா? 156

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/166&oldid=863513" இலிருந்து மீள்விக்கப்பட்டது