பக்கம்:தமிழஞ்சலி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி எதற்கும் அடிப்படைக் காரணம் இல்லாமல், எதையும் செய்யமாட்டாய் என்பது அனைவருக்கும் - தெரியுமா என்ன? அவனவன் அறிவின் தட்ப வெட்பத்திற்கு ஏற்றாற் போல் அல்லவா உன்னை எடைபோடுகிறான்! ஆனால் நீ. எல்லாருடைய இதயங்களிலே இருக்கும் இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்கிறாய் அல்லவா? ஏ, தத்துவ சோதியே! இயக்கத்தின் வளர்சிக்காக இறந்தவர்களை தாலாட்டிவிட்டு- இருப்பவர்களையும் தாலாட்ட வருகிறாயா? அனாதைகளுக்கு வாழ்வளித்துவிட்டு அடைய வேண்டிய செல்வத்தை அடைந்தவனையும் அருகிருந்து கவனிக்கிறாயா? நீண்ட கிளைகளை வைத்திருக்கின்ற குள்ளமான மரமா நீ நெடிய சாம்ராச்சியத்தை ஆளுகின்ற உருவமா ÉP சிறிய அலகைக் கொண்டு பெரிய இசையைப் பாடிடும் குயிலா நீ! செட்டான உருவம் கொண்ட முத்தா நீ? அடங்கிக் கிடக்கும் பெரும் பகையா? ஒடுங்கிக் கிடக்கும் பேராற்றலா? கட்டுக் கடங்கிய கடலா: உன் சக்தி எது? நீ தனிமையானால், கவிதைகளுக்கு இசையா? 157

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/167&oldid=863514" இலிருந்து மீள்விக்கப்பட்டது