பக்கம்:தமிழஞ்சலி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி தாய்மையை எடைபோட குழந்தை சிரித்தது. இரகசியமாகக் கிழக்கிலிருந்து எட்டிப் பார்த்தவனே! இதோ என் கைகளில் பூட்டியிருக்கும் விலங்கைப் பார்த்தாயா? சாக்ரடீஸ் போட்ட விலங்காக இருந்தாலும் சரி, ஏசுபிரான் பூட்டிய விலங்காக இருந்தாலும் சரி, உதய குரியனே நீ மாட்டிய விலங்காக இருந்தாலும் சரி. அது உரிமையின் வடிவமாக இருந்தால், உடைக்காமல் நான் பாதுகாப்பேன். மொழி ஆதிக்கத்தின் வடிவமாக அது புலப்பட்டால், சூரியனுக்குக் கீழே நான் பொடி பொடியாக்குவேன். என்னுடைய மொழி உணர்ச்சி கரைகின்ற கனவுகள் அ)ெ)ெ. உன்னை வெறுத்த இராக்கால மலர்கள் கூட ஒளிந்திருந்து உனது அழகைப் பார்க்கின்றன. இறந்துபோன தியாகிகளும், எல்லயற்ற பகைவர்களும்உன்னுடைய ஒளிக்கற்றையால்தான் உயிர் வாழ்கிறார்கள். உனது அற்புதமான முகவெட்டை - புகழ் ஒளியை - பூட்டை உடைத்து வெளியே வருகின்ற அறிவு ஒளியை - சில நொண்டி குதிரைகள் பார்த்துக் கனைத்தன. சில கழுதைகள் பார்த்து கத்தின - அவைகளை, நீ உன் பொன்னான கரங்களால் பொன்னோவியமாக மாற்றிவிட்டாய். அதாவது எதிரிகளை எதிரிலேயே உட்காரவைத்து நொடியிலே நண்பனாக்கிவிட்டாய்! 160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/170&oldid=863518" இலிருந்து மீள்விக்கப்பட்டது