பக்கம்:தமிழஞ்சலி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி தத்துவம், பூமியில் புறப்பட்டு வானத்தில் முடிவாகிறது. வானத்தில் முடிவான தத்துவம் வையத்தை நோக்கி மறுபடியும் வரும்போது, அது ஏறிவரும் தேர் நீதான்! உன்னை எள்ளி நகையாடுகிறவர்களை நீ அள்ளி எறிந்து விடுவதில்லை - மாறாக கிள்ளி சூட்டிக் கொள்கிறாய். உடம்பிலே வலுவில்லாதவன், நீ தருகின்ற வெப்பத்தை எண்ணித் திட்டுகிறான். மனதிலே சுத்தமில்லாதவன் பயப்படுகிறான். ஆனால், ஒளியும் - வலிவும் உன்னால் தான் வருகிறது என்பதைப் பிறகே உணருகிறேன். உலகம், நீ வாசிக்கும் யாழொலியை கேட்க ஆரம்பிக்கிறது. நீ காட்டும் அற்புதமான உதாரண உருவங்களைக் கண்டு ரசிக்கிறது. ஆனால், எதிரிகள் தன் கண்களை இறுக மூடிக் கொண்டு வசைமாரி பொழிகிறார்கள். அவர்கள் தூக்கமில்லாத குரங்குகள் - அவர்கள் கைகள் இழிவானவை. அவர்கள் புருவம் ஒரு முட்டாளின் புருவம். அவர்கள் வாய், பாம்பு முட்டையிடுவது போல தீயவைகளையே முட்டையிடும் கருவாயாகும். அவர்களுடைய கண்கள் இறந்தவனுடைய கண்களாகும். 16 ||

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/171&oldid=863519" இலிருந்து மீள்விக்கப்பட்டது