பக்கம்:தமிழஞ்சலி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி-கலைமணி அண்ணா, எண்ணத்தை விளையாட வைக்கும் இறை: அந்தி நேரத்தில், தொடுவானில் ஒரு பறவை பாடிக் கொண்டே செல்வதைக் கேட்டேன். அதன் சிறகுகளிலே பொருந்தியிருக்கும் இறகுகள் - சொர்ணத்தாலானவை. கூட்டை நோக்கி அது செல்கிறது. குஞ்சுகள் கூட்டிலே இருந்து தாய்க்காகக் காத்துக் கிடக்கின்றன! தொடுவான், வீடு திரும்பும் பறவைகளைத் தினந்தோறும் பார்க்கிறது. அந்த பறவைகளின் இலட்சியத்தைப் பற்றி, அது தினந்தோறும் நினைக்கிறது. வீடு திரும்பிய தாய்ப் பறவைகளை, கண்டு களிக்கும் குஞ்சுகளைத் - தொடுவான் பார்க்கிறது. இவைகளின் வாழ்க்கைக்கு இரை எங்கே கிடைக்கிறது? அற்பமான இரையைத் தின்றுவிட்டு, எவ்வளவு அழகாகப் பாடுகின்றன - தொடுவான் சிந்திக்கிறது. முழுமையான வாழ்க்கையை, இந்தப் பறவைகளுக்கு யார் வரையறுக்கப் போகிறார்கள்? இவ்வாறு தொடுவான் சிந்திக்கும் போது, அதன் முகம் சிவந்து விடுகிறது. ஏழைகள்பால் அண்ணாவுக்கு, தொடுவானின் இரக்க குணம் எப்போதும் இருந்ததை நான் உணர்ந்தவன்! 189

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/199&oldid=863549" இலிருந்து மீள்விக்கப்பட்டது