பக்கம்:தமிழஞ்சலி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி வானமாக இருந்து - தொடுவானாக வளைந்தவர். வரியாக இருந்து வரலாறாக, முடிந்தவர். ஒளித்துளியாக இருந்து ஒசையாக லயம் கலந்தவர். ஒளிக்கொழுந்தாக இருந்து பிழம்பு நுனியின் வருடலாக நீண்டவர். துளியாக இருந்து பிரளயமாகப் புரண்டவர். இறைவனின் முதல் மூச்சான காற்றாக இருந்து - பூந்தோட்டத்திலே புகுந்து வரும் தென்றல் ராணியாகத் திகழ்ந்தவர். இருளைத் தினந்தோறும் குடித்தும், ஒளியாக இருக்கின்ற நிலவு இன்னும் வரவில்லை. தோட்டத்தில் விழா நடத்துகின்ற பூக்கள் இன்னும் கூம்பவில்லை. இராஜாவின் அந்தப் புறச் சுவற்றுக்குப் பின்னால், இன்பத்தின் முணுமுணுப்பு இன்னும் துவங்கவில்லை. ஏழையின் குழந்தை இன்னும் பசிக்காக அழவில்லை. மின்மினிப் பூச்சிகள், தங்கள் தங்கள் சிங்காரத்தைக் காட்ட வயல் பக்கம் போகவில்லை. இறந்து போனவன் கல்லறை மேல், மெழுகு வத்தியினுடைய நரம்பில் ஒளியை ஏற்ற, வெட்டியான் வரவில்லை. அப்போது தொடுவானம், மோன முத்திரையிட்டு வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. 196

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/206&oldid=863557" இலிருந்து மீள்விக்கப்பட்டது