பக்கம்:தமிழஞ்சலி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி இங்கு மங்குமாகச் சிதறியிருக்கின்ற புல் பூண்டுகள், தங்களுடைய சிறிய தலைகளை ஆட்டி, கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றன. நிர்மலமான இந்த சூழ்நிலையில், திக்குத் தவறிய சில பறவைகள், கண்டபடி வானத்தில் மிதக்கின்றன. அதோ தலைக்கு நேரே ஒரே ஒரு பருந்து மட்டும் - கவலையற்ற சர்வாதிகாரியைப் போல, உயரத்தில் மிதக்கிறது. தொடுவான் இதையும் பார்க்கிறது. கீழே இருந்த பூண்டுச் செடியால் மேலே போக முடியவில்லை. மேலே இருந்த ராஜாளியோ - பருந்தோ - கீழே வர முடியவில்லை. தொடுவான் - பூண்டுக்கு மங்கிய ஒளியில் சிறுசிறு எறும்புகளை - அதன் பக்கத்திலிருக்கும் புற்றுகளைத் - தெளிவாகக் காட்டுகிறது. மேலே இருக்கின்ற பருந்துக்கு - கீழே, இயற்கை காட்டும் இரகசியம் புரியவில்லை. அண்ணா, மேலே இருப்பவர்களுக்கு இரகசியங்களைக் கூறியதில்லை. கீழே, புல்லாக - பூண்டாகக் கிடப்பவர்களுக்கு, நுணுக்கமான விஷயங்களை அறிவித்தவர். தொடுவானம், கடலின் மேல் கவிந்திருக்கும் போது, நீரே பொங்கி, மேலே இருந்து வழிவது போலத் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/207&oldid=863558" இலிருந்து மீள்விக்கப்பட்டது