பக்கம்:தமிழஞ்சலி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி ஆழமான அறிவிருப்பவர்களுக்கு, அண்ணா மேலே இருந்து வழிவதைப்போலத் தோன்றுவார். உயரமான ஒரு கொடிக் கம்பத்தின் மீது ஏறி நின்று, தொடுவானைப் பார்க்கும் போது, நிலத்திற்கும் தொடுவானத்திற்கும் மையத்தில், ஒரு கரிய கோடு இடும். அந்த இருள், இதுவரையிலும் உலகம் சந்திக்காத இருள். அந்த இருளுக்கு மேல், இதுவரை சந்திக்காத ஒரு வெள்ளி ரேகை இருப்பதையும் பார்க்கலாம். இது எதனால் வந்தது - என்று, விஞ்ஞானியும் விளக்கவில்லை - மெய்ஞானியும் கூறவில்லை. நான் நினைக்கிறேன், அந்த இருள்தான் மூடநம்பிக் கைத், தலையை அழுத்துகின்ற அண்ணாவாகும். வறண்டுபோன ஒர் ஆறு அதன்மீது தொடுவானத் தைப் பார்த்தேன். பரந்த மணல்வெளி, ஆற்றின்படுக்கையாக இருந்தது. எல்லையற்ற பெரும்பயணத்திற்கு அது இயற்கையா கவே போடப்பட்ட பாதையாகவே விளங்கியது. தொடுவானம் அந்த வரண்ட ஆற்றைப் பரிதாபமாகப் பார்க்கிறது. மனலே, அருவியாக ஓடி வானத்தில் கலப்பதைப் போலத் தோன்றுகிறது. 198

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/208&oldid=863559" இலிருந்து மீள்விக்கப்பட்டது