பக்கம்:தமிழஞ்சலி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-என்.வி. கலைமணி முன்னால் வெட்ட வெளியில் தனியாக இருப்பவன், விளம்பரமில்லாத நிமிர்ந்த தம்பியாகவே மாறுகிறான். நசுக்கினாலும் நசுங்காத நாகரீகம் போல, துரத்தி வந்தாலும் கைக்குக் கிட்டாத பேரொளிபோல் பூர்த்தியாக்கப்பட்ட மூலதனம் போல - தாக்கப்படாத அன்பைப்போல் - என்றும் விழித்திருக்கின்ற விழியைப் போல் - திக்குகளுக்குப் பூராவும் விரைந்திருக்கின்ற தொடுவானம் எளிய அல்லிக்கும் இறக்கும் காளானுக்கும் நகரும் புழுக்களுக்கும் ஊறும் எறும்புகளுக்கும் இறவாத சக்தி, இதுவென்று - காட்டிக் கொண்டு, இருக்கின்றது. அதனுடைய இருதயத்தில், கோடிக் கணக்கான நனவுகளும் - கவிழாத கனவுகளும் தினந்தோறும் வருகின்றன. தொடுவான், நட்சத்திரத்தின் கூடாரமட்டுமல்ல! நகர்ந்து நெளிகின்ற ஜீவன்களுக்கு முக்காடாகவும் இருக்கிறது. அதோ இரவு...! அதன் மீது நடக்கிறது! அதனை விடிந்த பிறகுதான் தேடவேண்டும். 20 !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/211&oldid=863563" இலிருந்து மீள்விக்கப்பட்டது