பக்கம்:தமிழஞ்சலி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி உண்மைப் பதியே - ஒங்கும் நிதியே - விண்ணுள் விரிந்து ஒளிரும் புகழே: தேர்ந்த உளத்திடையே மிகத் தித்தித்து ஊறும் செழுந்தேனே - சொல்லரசே! சார்ந்து திகழும் சண்பக எழுத்தாளா! பொறுமையின் பெருந்தகையே! கூர்ந்த மதி நிறைவே! தமிழ்க் கொழுந்தே! தீர்ந்த பெரும் குறள்நெறித் துணையே! ஒப்பிலா செல்வமே! எனது அரசியல் குருவே! சிறப்படையச் செய்பவனே! அறப்படைக்குத் தலைவனே! இலைக் குளிர்ந்து நிழல் பரப்பும் தருவே! தலைக் குளிர்ந்த அறிவே! கலைக் குளிர்ந்த கலையே! மலைக்குமேல் நிற்கும் முனையே! மதியணிந்த ஒருவா! தமிழர் துதியணிந்த ஒருவா! ஒழுக்க விதியணிந்த ஒருவா! தேன் படிக்கும் அமுதா! நான் படிக்கும் நூலே! ஊன் படிக்கும் - உளம் படிக்கும் - உயிர் படிக்கும் - உயிர்க்கும் உயிர்தான் படிக்கும் - அனுபவங்கள் படிக் கும் கருணைக் குன்றே - பொறுமையின் வானே! உலகம் பரவும் பொருளெல்லாம் அறிவான், என்கோ: கலகம் பெறும் ஐம்புலனை வென்றவன், என்கோ! தமிழத் திலகம் பெற்றவன் என்கோ: 2O7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/217&oldid=863570" இலிருந்து மீள்விக்கப்பட்டது