பக்கம்:தமிழஞ்சலி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி உலகம் தலைவணங்க உயர்ந்தோன் என்கோ! மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் ஒளியே! ஆணிப் பொன்னே! சீர்கொண்ட திரள் அறிவு நுதல் சுருங்கும் அறிவு நிறைச் சுருக்கமே! உனக்கே விழைவு கொண்டு ஓலமிட்டு இங்கே எனக்கென்று இருக்கின்ற இருதயத்தை உன்பால் வைத்தேன். தனக்கென்றும் ஒன்றுமில்லாத தயவே! பிறர்க்களிக்க மனக் கதவைத் திறந்து வைத்த - அன்பு மாளிகையின் வாயிலே! குடி வாழ்த்தும் கோனே! உன் வாய்ப்பட்ட வார்த் தையெலாம் மணக்கும் - சிந்தனைக் கரம்பட்ட பொரு ளெலாம் மணக்கும்! நோய்ப்பட்ட சமுதாயத்தின் மருந்து நீ! ஓயாத புகழ் வாசம் வீசுவாய் நீ! படுக்காத அறிவனே! எடுத்த புகழத்தனையும் இந்நாட்டுக்கே நீ எடுத்த புகழ்! அடுத்துவரும் புகழெல்லாம் தமிழ்நாட்டுக்கு அன்று எதற்குண்டு? வாங்கி ஒளிக்கீற்றை வாரி இறைக்கும் திங்கள்: தீங்கு தருவதில்லை - அங்கும் வளம் தருமே! மூங்கை வாய் திறந்து, மொழி நலனில் பேச வைக்க - நீங்கள் செய்யும் பணி, நிலமுள்ளவரை நீடிக்கும். 208

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/218&oldid=863571" இலிருந்து மீள்விக்கப்பட்டது