பக்கம்:தமிழஞ்சலி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அவர் போன பாதையில் மாரிக்கால இருட்டு தவழ்கிறது. காலத்தின் மடியில் அவர் ஏன், தானே - ஒரு காலமாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பிறப்பித்தவன் - அவரை இறப்பித்தான்! அவரைச் சிறப்பித்தவன் - அவரைச் சிறை பிடித்தான். அவரை வரப்படுத்தியவன், மீண்டும் வரவேற்றுக் கொண்டான். அவரைக் கறைபடுத்தியவர்கள் - கரைந்து கொண்டே செல்கிறார்கள். ஆண்டுக்காண்டு நம்முடைய கண்கள் அவரை நினைத்துக் குடம் குடமாகக் கண்ணிரைக் கறந்தாலும், காலமாகிவிட்ட அண்ணா - நெஞ்சில் நீங்காக் கோலமாகிவிட்ட அண்ணா - மனிதர்க்கும் மனிதத்திற்கும் பாலமாகிவிட்ட அண்ணா மனத்திற்கும் மனசாட்சிக்கும் சீலமாகிவிட்ட அண்ணா ஒரு முடியாத கதை! விடியாத இன்பம்! நொடியாத வாழ்க்கை: 'இந்த இதய எழுச்சி எழுத்துக்களின் மையப் புள்ளியே, காலத்தின் நீண்ட கரங்களால் செதுக்கப்பட்ட மனிதத் தேர், நல்ல வாழ்க்கை என்ற சுற்றுலா முடிந்த பிறகு, H 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/24&oldid=863577" இலிருந்து மீள்விக்கப்பட்டது