பக்கம்:தமிழஞ்சலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. சுவைமணி பிரவாகத்தில் கலந்துவிடு - இல்லையென்றால்: உனது சிறிய உடலை எறும்பு கூடச் சிதைத்து விடும் - என்றது நீர்வீழ்ச்சி! அண்ணாகூடத் தம்பிகளை - அறிவுப் பிரவாகத்தில் கலக்கச் சொன்னார். கிடைத்த ஒளியில் பிரகாசிப்பதைவிட - கிடைக்கப் போகும் ஒளிக்காக வாழ்க்கையை அமைப்பதே: அண்ணாவின் கொள்கை. விழுந்து விட்டோமே என்று நீள்வீழ்ச்சி, மலையுச்சியைப் பார்க்கிறது. நீ இன்னும் விழுந்து விடவில்லை! வழிந்து கொண்டிருக்கிறாய் - என்று: உச்சி உரைத்தது! நான் அவ்வளவு நெடியவனா? நீர்வீழ்ச்சி கேட்கிறது! இறவாது வடிபவன் நீ என்று உச்சி கூறியது: என்னுடைய முடிவு எப்போது? நீர்வீழ்ச்சி கேட்கிறது: உன்னுடைய தொடக்கமே எனக்குத் தெரியாதே - மலையுச்சி சொல்லிற்று. தொடங்கியது முடியத்தானே வேண்டும்! நீர்வீழ்ச்சி கேட்கிறது. எது முடிகிறதோ அது தொடங்கும் என்றது உச்சி! ஆகவே, நீ முடியவில்லை - உனக்குத் தொடக்க மில்லை. அப்படியானால் நான் யார்? நீர்வீழ்ச்சி கேட்டது. அருள் முளைக்கும் வேருக்கும் ஆணிவேர் நீ! 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/35&oldid=863589" இலிருந்து மீள்விக்கப்பட்டது