பக்கம்:தமிழஞ்சலி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி ஊதா மலர்! தூரத்தில் ஊதாமலர் ஒன்று களுக்கென்று என்னைப் பார்த்துச் சிரித்தது. நகை வந்த திக்கை நோக்கினேன். மனிதனில்லை அங்கே மலர் இருந்தது. மலரே! நகைத்தது நீயா? என்றேன். ஆம்! என்றது அந்த மலர். எதற்காகச் சிரித்தாய்? கேட்டேன். "இங்கே வா என்றது; அந்த ஊதா மலர். நிலையிழந்த மனிதா இயற்கைக்கு வாயில்லை பேச, ஆனால், அந்த இயற்கையை மாயமெனக் கூறுகிறாயே. உன் நினைவுகளுக்குப் பதிலளிக்காததால், அவ்வாறு கூறுகிறாயா? இதை இயம்ப எத்தனை ஏடுகளைப் படித்தாய்? அவாவின் சிறகுகள் அளவிலாத் தொலைவுவரை சிறகடித்துச் சேர்ந்து தொங்கும்போது, அவனியே மாயம் என்கிறாய். வானை நோக்கிக் கையேந்தி நிற்குமாறு உன்னைக் கூறியது யார்? வானம் வழங்காவிட்டால் அதை மாயமென்று சொல்லச் சொன்னது யார்? இட்டதைப் பெரிதென்பான் மனிதன்! இடாததை இழிவென்பான் அஃது உனக்கும் உரிய நியதியோ! 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/43&oldid=863598" இலிருந்து மீள்விக்கப்பட்டது