பக்கம்:தமிழஞ்சலி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி சிறிது நேரத்திற்கு முன்பு வானவில்லை மாயம் என்று சீறினாயல்லவா? வானவில்லில் இருக்கின்ற வண்ணங்களிலே ஒரு நிறம் நான். என் ஊதா மேனியைப் பார்: நான் மாயையா? தொட்டுப் பார்த்துக் கூறு. அவாவைப் பற்றிக் கதைகளை அளந்தவனே, ஒழித்தாயா நீ - அவாவை? அவாவை அழித்தான் சித்தார்த்தான். அவன் புத்த னான கதை தெரியுமா உனக்கு? காலையில் ஒருநாள் கபிலவாஸ்துச் சோலையிலே: அவன் மன்னனாக இருந்தபோது வந்தான். மாலையிலே நான் காம்பொடிந்து செடிக்குக் கீழே விழுந்து கிடந்தேன். கண்டான் காவலன்! மருண்டான் எனைப் பார்த்து. சிந்தனை வளையம் சுழன்றது அவனுக்கு. வாடிய மலருக்கு வாழ்வென்பது எது? வதங்குமா tడ్డు சிந்தித்தான் சித்தார்த்தன். முடிவு காண முனைந்தான். போதியின் கீழே அமர்ந்தான். புத்தொளி பிறந்தது. ஞானம் படர்ந்தது. ஆசையின் அழுக்கு இழுக்குகள்: அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தன. சித்தார்த்தன் புத்தனானான்! 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/44&oldid=863599" இலிருந்து மீள்விக்கப்பட்டது