பக்கம்:தமிழஞ்சலி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி நான் மலர் உயிரில் மிகச் சிறிய உயிர்! கபிலவாஸ்துவின் காவலனெங்கே? கருகிய மலரான நானெங்கே: முடிவென்ன தெரியுமா? ஒரு மலர்; மன்னன் மனதையே மாற்றி விட்டது. மாயை, மனதை மாற்றுமா? தெளிவைக் கொடுக்குமா? சித்தார்த்தனிடம் செல்வானேன். தென்னகத்தின் பேரறிஞரைக் கவனி. அமைதிக்கு அடைக்கலம் தந்து - அரசியலுக்குப் புத்துருவம் அளித்தவர். பொன்னாகப் பொதுவாழ்வைப் பொலிவுபடுத்தியவர்: தன்னகத்தே கொண்டிருக்கிறார். தன்னாலாக்கப்பட்ட எழிற் கொள்கைகளை. அறிஞர் அண்ணாவின் தம்பிகளிடையே சென்று உனது அண்ணன் ஒரு மாயை என்று அறைந்து பார். அறிவுவாதத்தில் அடியற்ற மரம் போல நீ வீழ்கிறாயா இல்லையா என்று பார் என்றது அந்த ஊதா மலர். ஊரறிய உரைத்த ஊதா மலரின் தத்துவச் சிந்தனைகளை, தூர இருந்து மற்றொரு மலர் உற்றுக் கேட்டது. செந்தூர மலர்தான் அது விடுமா அவனை என்னே தம்பி என்று பேசிடத் துவங்கியது. ஊதா மலரைக் கண்டு; செந்துTர மலர் - விலா நோகச் சிரித்தது! 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/45&oldid=863600" இலிருந்து மீள்விக்கப்பட்டது