பக்கம்:தமிழஞ்சலி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ான்.வி. கலைமணி பைங் கூழ்! இச்சித்தப் பொருள் யாவும் எட்டிச் சென்று விட்டதால் அவற்றை மாயை என்கிறான் மானிடன்! பச்சைப் பைங்கூழ்கள் பார்த்த பின் கூட, இச்சரக்கை எப்படித்தான் நீ அவிழ்த்தாய் இவ்வாறு வினா வெழுப்பிக் கிண்டல் குறும்பவிழ்த்து நகைத்தது நல்கூழ்! இக்கரைக்கு அக்கரைப் பச்சையென்று, அறிவு திக் கற்ற மூளையெல்லாம் இயம்பிற்று. அதைக் கேட்டு விட்டு, பச்சை நிறம் அழியும் என்கின்ற பசப்பு வார்த்தையினால், இச்செகத்தை ஏய்ப்பவர்கள் இருக்கின்றனர்! அஃதே போல் நீயும் நினைத்து விட்டாயோ, தம்பி! கடலிலே காய கல்பமுண்டு - கருமேகம், பெருநிலத் தால் காதலித்துப் பொழிகின்ற காதல் மழை, பருவமழை! மேகத்திற்கும் - பூபாகத்திற்கும் ஏற்பட்ட திருமணத்தின் பயனாகக் கழனி கருவுற்றாள். நாற்று தவழ்ந்தது! நெல்லாய் வளர்ந்தது. பச்சை நிறத்தோடு, பாயும் தென்றலுடன், கை கொட்டிச் சிரிப்பதைக் கண்டான் - ஏராளன்: அன்னைத் தமிழ் நிலத்தில் - அழகுப் பழனத்தில் ஆடும் நெற்கதிர்களைப் பார்!. அவை அணிந்துள்ள ஆடை வண்ணத்தின் நிறம் { { ታ6ðéዎ! 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/49&oldid=863604" இலிருந்து மீள்விக்கப்பட்டது