பக்கம்:தமிழஞ்சலி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி மாதவி! குறிஞ்சிப் பாட்டெனும் இலக்கியத்தில் பெரும் புலவர் கபிலர் 'பைங்குருக்கத்தி என்ற ஓர் கொடியைக் குறிப்பிட்டார். அக் குருக்கத்தி, ஒரு கொடி! அழகு தவழ, நெடிது நீண்டு வளரும்! பற்றுக் கொம்பின்றி, அது தானே பற்றிப் படராத பான்மையது! வேறு கோல் கொண்டு பந்தரிட்டு: அதன் மேல் குருக்கத்தியை ஊன்றி. ஆறு காட்ட வேண்டும். அப்போது தான் அது நன்கு வளரும் படரும்! தப்பாது தழைக்கும்! இக்கொடி படரும் பந்தருக்கு சங்ககாலத்தில் மாதவி பத்தர், என்ற பெயருமுண்டு! மாதவிக் கொடியின் நிறம் கண்ணைக் கவரும் நல்ல பச்சை நிறமுடையது தம்பி! நூணா என்றவோ இலையை நுணுகிப் பார்த் திருக்கிறாயா? அது போன்ற பச்சையாகவே இருக்கும் குருக்கத்தி இலை! அந்தப் பச்சை இலையிலே பூக்கும் பூ வெண்மை நிறம்! 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/52&oldid=863608" இலிருந்து மீள்விக்கப்பட்டது