பக்கம்:தமிழஞ்சலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி மஞ்சள் சாமந்தி! அஞ்சனந்தோய் விழியுடையாள் மஞ்சள் நீராடி, அந்திவேளையிலே கொஞ்சும் தென்றலோடு குழையும் கடையினை திருத்தி அமைத்தவாறு: தளிர்நடை போடுதலொப்ப, செடியின் முடிமீது சிரித்து நின்ற மஞ்சள் சாமந்தி: கேலிச் சிரிப்பு சிரித்தது! சிரிப்பொலி கேட்டுச் சிலிர்த்து நெருங்கினேன்! மஞ்சள் சாமந்தியின் கவின்மிகு வண்ணத்தைக் கண்டேன்! எனக்கு முன்னே எண்ணற்ற மலர்கள் விரவிய அறிவுரை மணங்களை நுகர்ந்தனையோ என்றது! தேவைத் திணிப்பாலே ஏங்கி நின்று, அவா பூர்த்தியாக முடியாமல் அவதிப்படும் மானிடனே! தேங்கி நிற்கும்போது தெளிவற்றோர் கூறும் வாசகங்களைக் கூறிவிட்டாய் நீ! வாழையடி வாழையாக வந்து போகும் கோழை மனம் உனக்கும்! அறிவின்மை ஏழைக்கு அதிகமன்றோ! தேவை முறியும் போது தெளிந்த அறிவுடையோரும்: ஆவலுக்கு அருள் தாரா அனைத்தையும் மாயை என்பர்! அஃதைப் பின்பற்றி நீயும் அலறுகிறாய்! மஞ்சள் மங்கலத்தின் சின்னம்! 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/58&oldid=863614" இலிருந்து மீள்விக்கப்பட்டது