பக்கம்:தமிழஞ்சலி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அவ்வண்ணமின்றி பொங்கும் இன்பத்தைத் தொடங் கியவர் எவருமில்லை! முகடு மலையிடுக்கில் போய் மறையும் பகலவனின் ராஜ உடையின் பெயர் அந்தி: அந்த நிறத்தைக் கூர்ந்து அறிந்தனையோ அஃதும் மஞ்சளே! நாகரிக உலகில் பிணியிருக்கும் இடத்தை நல்லோர்க்குக் காட்டுதற்கு, மருத்துவத் துறையினர் மஞ்சள் கொடி கட்டி, மருளைக் காட்டிடுவர். அஃதுமட்டுமோ! முக்கடல் உடை உடுத்தி, முப்பால் குறளேந்தி, திக்கெலாம் புகழ் மணம் பரப்பித், திருக்கோலம் பூண்டிருப்பது தென்னகத்து மண்: அம்மண்ணின் தானைத் தலைவனாக - தனிப் பெரும் மன்னனாக - சூழ வலம் வந்த சுந்தர அறிவா জ্ঞা দুটrd பைந்தமிழறிஞர் பார்புகழும் பசுந்தமிழ் முதற்செல்வர்: நைந்த மக்கட்கு நிம்மதி வழங்கியவர்: கைதேர்ந்த அரசியல் பெரும் ஞானி! அறிஞர் குல திலகம் அண்ணாவின் சமுதாயச் சீர்திருத்தம் துவங்கு முன்பு காட்டிய நிறமும் - மஞ்சள் தானே! எற்றுக்கு அவ்வண்ணமே தேர்ந்தெடுத்தார்? பற்றியிருக்கும் இந்நாட்டு மூட நம்பிக்கைப் பிணியைச் சுட்டுதற்கு? 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/59&oldid=863615" இலிருந்து மீள்விக்கப்பட்டது