பக்கம்:தமிழஞ்சலி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அந்த மரத்தை வரிப் புலியென மயங்கி அதன் எழில் தோற்றத்தைக் கையால் முறுக்கியது. எழிலை வீழ்த்தியது. கழலால் துவைத்தது. அம்மரம் போல் பிறிதோர் மரம் காணுங்கால் களிறு நல்நோக்கு பாராது வெறுத்தே விலகிற்றாம். "கலித்தொகையிலே வரும் கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு என்ற 49-வது பாடல் இந்தக் கருத்தைக் கூறுகிறது. களிறே வேங்கைப் பூ மலர்ச்சியைக் கண்டு புலியென நம்பிற்றென்றால், காரிகையர் ஏன் ஏமப் பூசலிடார்! என்றது வேங்கைப் பூ. முடிந்ததா பூவே, உன் முழு வரலாறு, என்று மாயை மனிதன் கேட்டான். இல்லை தம்பி, பூவின் சில பாகங்களைக் கூறினேன். பிற பகுதிகளையும் கூறுகிறேன் கேள் - என்றது பூ. மாயை நிரம்பிய மனிதன், வேங்கைப் பூ புகன்ற, வரலாற்றைக் கேட்டு மயக்கமடைந்தான். என்னே! மானிடர் கூட்டத்தின் பிரதிநிதியே, பூ உரைப்பது புனைந்துரையோ என்று மயங்குகிறாயா? தெளிவில்லாத நெஞ்சமே! நீ தெளிவடையத்தான், தெள்ளு தமிழில்க்கிய வரலாற்றின் ஆதாரங்களைக் கூறுகின்றேன். பிறகு, ஏன், உன் பிஞ்சு நெஞ்சு பேதலிக்கிறது? பிறவும் சொல்கிறேன் கேள், என்று மேலும் பேச ஆரம்பித்தது. 6 :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/71&oldid=863636" இலிருந்து மீள்விக்கப்பட்டது