பக்கம்:தமிழஞ்சலி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி வேங்கைப் பூ, புலியை ஒத்திருப்பதனையறிந்த வேல் விழியர், பூ பறிக்கும்போது, புலிபுலியென ஆரவாரிப்பர். இதனைத் தமிழ் இலக்கியங்கள் அழகாக இயம்புகின் தன. "மன்ற வேங்கை மலர்தம் நோக்கி ஏறாதிட்ட ஏமப் பூசல் என்று குறுந்தொகையிலும், "தலைநாள் பூத்த பொன்னினர் வேங்கை, மலைமார் இடு உம் ஏமப்பூசல்" என்று 'மலைபடுகடாம் எனும் நூலும் கூறுகிறதே. பாவையர் மட்டுமே வேங்கைப் பூவைக் கண்டு ஆரவாரமிடவில்லை. வேழமே அஞ்சு மருண்டுள்ளது. வேழம் ஒன்று, ஒரு நாள் இரு வரிப்புலியோடு பொருதிற்றாம். அந்தப் புலியின் உகிரால் விளைந்த வடுக்களை எண்ணி, கரி வீர வருத்தம் கொண்டதாம். அதே அத்தி, பிறகு அதே நினைவுடன் துயில் கொண்டதாம். அப்போது கனவு ஒன்று கண்டது வாரணம். புலியின் தோற்றம் அக் கனவிலே வந்ததாம். உடனே வேழம் துயிலை நீக்கியது. அதே சினத்தோடு பொங்கி எழுந்தது. கனவிலே வந்த புலியைக் காணவில்லை. எதிரே புதிதாய் பூத்து மலர்ந்த வேங்கை மரத்தை அந்த வேழம் கண்டதாம். 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/70&oldid=863634" இலிருந்து மீள்விக்கப்பட்டது