பக்கம்:தமிழஞ்சலி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி இரக்கப்பட்டு அருள் வழங்கும் ஒருவனின் 3:ր մն மையான உள்ளமும் - அதன் உடல் நிறமும் ஒன்றாக இருந்தது. வைரத்தின் ஒளியும் - பொன்னின் கதிர்த் தெறிப்பும் அதன் கண்ணிலே ஒளிர்ந்து கொண்டிருந்தன! இப்போது அந்தப் பறவையை என்னால் சரியாகக் காணமுடியும். செதிள் செதிளாக அணிவகுத்து எழில் பரப்பிக் கொண்டிருக்கும் இறகுகள் - அதன் சிறகுகள் மீது படர்ந்திருந்தன. உடனே எனக்கு தலை கிறுகிறுத்தது. ஏனென்றால், அந்தப் பறவையைச் சுற்றியிருக்கும் பிழம்பொளி என் கண்மணியைக் கூசவைத்தது. தங்கமே எரிந்து பூவானம் பூவானமாகிக் கொட்டுகின்ற பூவெல்லாம், நவரத்தின வண்ணத்தோடு சிதறுமானால் - தாங்க முடியாத அவ்வொளி வெள்ளத்தை, எந்தக் கண்ணாலும் ஆட்கொள்ள முடியாதல்லவா? இப்போது நான் இந்த நிகழ்ச்சியின் விளைவால், கீழ் நோக்கித் தள்ளப்பட்டு விட்டேன். எனக்கு முன்னால் நெடிய மலை என்னைச் சுற்றிலும் ஒரே பள்ளத்தாக்குகள். காற்றின் பேரிரைச்சலால் உளறிக் கொண்டிருக்கும் குகையின் எதிரொலிகள்! 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/92&oldid=863682" இலிருந்து மீள்விக்கப்பட்டது