பக்கம்:தமிழஞ்சலி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி நான் பகலெல்லாம், இம்மனிதச் சமுதாயத்தின் துன்பங்கள் எப்படி முளைக்கின்றன - தழைக்கின்றன - இதற்கு மூலம் யார்? அந்தம் உண்டா? என்று உள்ளார்ந்த தியாக உணர்ச்சியோடு எண்ணியதால் - இடை இடையே களைத்து - இடையிடையே நெப்போலியனைப் போல நொடித் துரக்கம் தூங்கி, இரவு நேரத்தில் இரைக்காக அலையும் காட்டு மிருகங்களைப் போலத் - தத்துவங்களுக்காக அலைந்து கொண்டிருப்பவன்! அந்த கிராம மக்கள் கிடைத்ததை வைத்து வாழ நினைப்பவர்கள்! நான், கிடைக்க வேண்டியது ஏன் கிடைக்கவில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவன். அவர்கள் வருத்தம் வருகிற நேரத்தில், முகத்திலடித் துக் கொண்டு கோயில் முன்பு அழுவார்கள். வருத்தம் வருகின்ற வழியை அடைத்துவிடத் துடித்துக் கொண்டிருப்பவன் நான்! துன்பம் வரும்போது அவர்கள் அழுவார்கள் - இன்பம் சிரிக்கும்போது சிரிப்பார்கள்! துன்பம் துளிர்க்கும் இடத்தையும், இன்பம் அரும்பும் இடத்தையும் - மனிதனுக்கென்றே படைத்தவர்கள் யாவர்? என்று. நான் கேட்டுக்கொண்டிருப்பவன்! இந்தச் சமுதாயம் அந்த மக்களைப்போல் கப சூது அற்ற நிலையில் இருக்கிறது. 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/94&oldid=863685" இலிருந்து மீள்விக்கப்பட்டது